10,000 பழமரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் கிராம ஊராட்சி - ten thousand saplings planted by village panchayat
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி கிராம ஊராட்சியில் 10,000 மரக்கன்று நடும் நிகழ்வை சுதந்திர தினத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களில் 42 ஏக்கர் பரப்பளவில் 8000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை இன்று தொடங்கி வைத்தனர்.