யானையை துரத்தி அச்சுறுத்திய வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்! - mudumalai tiger reserve
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள் உள்பட பல வனவிலங்குகள் உள்ளன. அதனால் முதுமலை சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனத்தை தேவையில்லாமல் நிறுத்தவோ, வனவிலங்குகளை அச்சுறுத்தவோ கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சிங்காரா வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதகையைச் சேர்ந்த சுஜீன், அவரது நண்பர் இருவரும் சாலையை கடந்த யானையை வாகனத்தை இயக்கி அச்சுறுத்தினர். இதனால் வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விதித்தனர்.