தென்காசி மாவட்டத்தை உதயமாக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! - தென்காசி மாவட்ட விழா
அரசின் நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமென்று கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து தென்காசி, சங்கரன்கோவில் என வருவாய் கோட்டங்கள் மற்றும் எட்டு வட்டங்களுடன் உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.