'தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் எவ்வித வசதிக் குறைபாடும் இல்லை' - கரோனா தற்போதைய செய்திகள்
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் ஏற்றம் கண்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோயாளிகளுக்கும் தகுந்த இடைவெளியுடன் சிகிச்சை அளிக்குமளவுக்கு இடவசதி இருக்கிறதா, என்ற கேள்வி பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தியுள்ள வார்டுகள் அடிப்படை வசதிகளுடன் இருக்கிறதா?, என கேள்வியெழுப்புகையில், ‘ஆம் இருக்கிறது’ என உற்சாகமாகப் பதிலளிக்கிறார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ். அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உணவும், மருத்துவ ஊழியர்களின் கவனிப்பும் எங்களை மீட்டெடுத்தது என புன்னகைக்கின்றனர், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள்...