உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி பட்டாசுகள் வெடிக்க வேண்டும் - சைலேந்திர பாபு - சைலேந்திர பாபு வீடியோ
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகள், பறவைகள் சரணாலயம், குடிசை பகுதிகள், சிறு குழந்தைகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.