சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை! - சென்னை மாவட்டம் செய்திகள்
சென்னை புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொது மக்களை வாட்டி எடுத்து வந்த நிலையில், இன்று (மே.04) திடீரென மழை பெய்தது. இந்த மழையானது பல்லாவரம், பம்மல் திருநீர்மலை, பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடைவிடாது மிதமான மழை பெய்ததால், அப்பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.