மதுரையில் திடீரென பெய்த கோடை மழை - திடீரென பெய்த கோடை மழை
மதுரை: சில நாட்களாக கோடை வெப்பம் கடுமையாக தகித்து வந்த நிலையில், 100 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தியதால் அனல் காற்றும் வீசியது. இந்நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை தற்போது பெய்து முடிந்துள்ளது. இந்த மழை ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.