பூரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளின் மணற்சிற்பம்....! - பூரி கடற்கரை
அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக். 2) கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள், மக்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர். அந்தவகையில், ஓடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணலால் அண்ணல் காந்தியடிகளை சிற்பமாக செதுக்கியுள்ளார்.