நீரில் முழ்கிய காந்தை ஆறு பாலம் - மலை கிராம மக்கள் பாதிப்பு - கோவை மாவட்டம், சிறுமுகை
பவானி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், நீர்தேக்கப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதனால் கோவை மாவட்டம், சிறுமுகை அருகே லிங்காபுரத்திலிருந்து காந்த வயலுக்கு செல்லும் வழியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்ட பாலம் சிறிது சிறிதாக நீரில் மூழ்கி வருகிறது. இதனால் மலை கிராம மக்கள் காந்த வயல் பகுதியில் இருந்து பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து லிங்காபுரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.