அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம் - தட்டி கேட்ட ஓட்டுநரிடம் மாணவர்கள் ரகளை! - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ராஜா தியேட்டர் பேருந்து நிலையம் சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறு மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை தட்டி கேட்ட ஓட்டுநரிடம் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.