சாதி, மத, பேதமின்றி அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடிய மாணவியர்! - பண்டிகை
கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்திலும் களைகட்டத் தொடங்கியது. இதன்படி நாகர்கோவிலில் இன்று பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ மாணவியர் சாதி, மத, பேதமின்றி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். நிகழ்ச்சியில் கேரளா பாரம்பரிய உடைகளை மாணவியர் அணிந்தும், ஓணத்தின் முக்கியமானதாக கருதப்படும் அத்தப்பூ கோலமிட்டும் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Last Updated : Sep 11, 2019, 7:25 AM IST