மாநில அளவில் நடந்த ஆணழகன் போட்டி: 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு! - கீழப்புலியூரில் நடந்த ஆணழகன் போட்டி
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் ஸ்பார்டன் பிட்னஸ் கிளப், ஐ.எ.எப்.சி. இணைந்து நடத்திய 'மிஸ்டர் தமிழ்நாடு 2021' ஆணழகன் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 மாவட்டங்களைச் சேர்ந்த 340 பேர் கலந்து கொண்டனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து முதல் பரிசையும், திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகானந்தம் இரண்டாம் பரிசையும், தருமபுரியைச் சேர்ந்த சந்தோஷ் முன்றாம் பரிசை தட்டிச் சென்றனர்.