நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடக்கம்! - corona infection
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊடரங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்குத் தட்டுபாடின்றி காய்கறிகள், பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தட்டுபாடின்றி காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடங்கியது. சந்தை மதிப்பை விட, குறைந்த விலைக்கு வீடு வீடாக விற்பனை செய்துவருவதால், தற்போது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.