கரோனா சிகிச்சை மையத்தில் இசை மழை! - specially challenged singer sing song
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் வரும் "கண்ணான கண்ணே" பாடலை, அதே குரல் வளத்துடன் பாடியதால் பிரபலமானவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி இளைஞர் திருமூர்த்தி. பிறவியிலேயே கண்பார்வை இல்லாத திருமூர்த்தி, நல்ல குரல் வளம் கொண்டவராக உள்ளார். இவரின் குரல் வளத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த இசையமைப்பாளர் இமான், தனது இசையில் பாட வைத்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெறும் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பர்கூரில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் திருமூர்த்தி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் மனு அழுத்தம் நீங்க, திருமூர்த்தி இசை வாசித்து பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.