சமூக ஆர்வலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை - செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவை: அதிக அளவு மண் எடுப்பதாகவும், செங்கல் சூளையினால் பலரும் ஆஸ்துமா போன்ற சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சமூக ஆர்வலர்கள், சின்ன தடாகம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இதனால் கடந்த வாரம் செங்கல் சூலை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளை மாசு கட்டுபாட்டு வாரியம், காவல்துறை, வருவாய் ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பொது கூட்டம் கூட்டி தெரிவித்தனர். இந்த சூழலில் மனு அளித்தவர்களுக்கு செங்கல் சூளை உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களால் மிரட்டப்பட்ட டி.எம்.எஸ்.ராஜேந்திரன், கணேஷ் ஆகியோர் தங்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.