'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா' - பின்னிப் பிணைந்த பாம்புகள்..!
ஊர்ந்து செல்லும் உயிரினங்களிலேயே பாம்பு என்றாலே மனிதர்களுக்கு தனி பயம் தான். பாம்பைக் கண்டால் பயம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தாலே அது அழகுதான்! அதிலும் அவை நடனமாட தொடங்கிவிட்டால் அழகோ அழகுதான். இதுபோல் நாமக்கல் பரமத்தி வேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் செந்தில்நாதன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மதியம் சுமார் 5 அடி உயரம் கொண்ட மஞ்சள் நிற சாரைப்பாம்பும் நல்லபாம்பும் பின்னி பிணைந்து கொண்டிருந்தது.