இருசக்கர வாகன இன்ஜின் பகுதியில் புகுந்த பாம்பு - காணொலி வைரல் - சென்னை அண்மைச் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதியில், பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைக் கண்ட வாகன உரிமையாளர் உள்ளிட்டோர் பயந்து ஓடியுள்ளனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக பாம்பின் வாலை சுருட்டி, லாவகமாகப் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.