உணவைத் தேடி வந்த சாரை பாம்பு - குளிர்பான டின்னிற்குள் சிக்கித் தவிப்பு - தர்மபுரி
தர்மபுரி ஒட்டப்பட்டி அருகே ஏரிக்கரையில் உணவுத் தேடி வந்த சாரை பாம்பு ஒன்று குளிர்பான டின்னிற்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டது. சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக தலையை மீட்க முடியாமல் துடித்துக்கொண்டு இருந்தது. அதனைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் வனவிலங்கு ஆர்வலர் ஹரி என்ற இளைஞருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த இளைஞர் லாவகமாக பாம்பிற்கு காயம் இல்லாமல் குளிர்பான டின்னில் இருந்து பாம்பின் தலையை விடுவித்து காப்பாற்றினார்.