மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிடிக்கப்பட்ட 5 அடி நீள பாம்பு - Mayiladuthurai Taluk
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக கட்டடத்தைச் சுற்றி, பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கும் நிலையில் பூங்கா உள்ளது. இந்த அலுவலகம் முன்பு 5 அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்று மரத்தில் ஏறிக்கொண்டிருந்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மரத்தின் மேலிருந்த பாம்பை பிடித்தனர். தொடர்ந்து அந்தப் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் தெரிவித்தனர். புதர் சூழ்ந்துள்ள பகுதியை சீரமைத்து, பொதுமக்கள் அமரும் வகையில் சிமெண்ட் பெஞ்சுகளுடன் கூடிய பூங்காவாக இதனை மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.