சீர்காழி விக்ரம நாரயண பெருமாள் கோயிலில் விளக்கு பூஜை! - vilakku poojai
மயிலாடுதுறை: சீர்காழி தாடாளன் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றான, திரு விக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, லோகநாயகி தாயார் சன்னதி முன்பு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வழிப்பாடு செய்தனர்.