புற்றடி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா - Putradi Mariamman Kovil Sirkazhi
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரசித்திப் பெற்ற புற்றடி மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனிடையே குடியரசு தினத்தையொட்டி, தேரில் தேசியக்கொடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சீர்காழியின் முக்கிய வீதிகளின் வழியாகத் தேர் சுற்றி வந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.