குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்! - பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது சாரல் மழை பெய்து, வனங்கள் செழிப்பாக உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீருக்காக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையோரம் உள்ள கிராம பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. அதிலும் மரப்பாலம் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.