வெறிச்சோடிய சாலையில் ஹாயாக நடந்து வந்த யானை: பின்னோக்கி இயக்கப்பட்ட வாகனங்கள் - ஆசனூர் சாலையில் ஹாயாக நடந்து வந்த யானை
ஈரோடு: அண்மையில் பெய்த மழையால் ஆசனூர் பகுதி வெப்பம் தணிந்து குளுமையாக மாறியுள்ளது. ஊரடங்கு காரணாக போக்குவரத்து சிக்கல்கள் இன்றி வெறிச்சோடிய ஆசனூரில், இயற்கை சூழலில் யானைகள் சாலையில் ஹாயாக நடந்து செல்கின்றன. அந்த வகையில் இன்று (ஜூன்.06) ஆசனூர் சாலையில் ஒற்றை ஆண் யானை ஹாயாக நடந்து சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். யானை நீண்ட தூரம் எதிரே நடந்து வந்ததால் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் பின்னோக்கி இயக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.