காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது - chennai district news
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் ராட்சத ஆமையை பரிசோதனை செய்தனர். அப்போது ஆமை இறந்தது தெரியவந்தது. படகுகளில் அடிபட்டு ஆமை கரை ஒதுங்கி இருக்கக் கூடும் என தெரிகிறது.