எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் பயணித்த எம்எல்ஏ! - செந்தில்பாலாஜி எம்எல்ஏ
எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதன எதிர்ப்புப் பரப்புரையில் ஈடுபட்ட எம்எல்ஏ செந்தில்பாலாஜி, இரட்டை மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். கோவை சாலை, கரூர் பேருந்து நிலையம், மனோகரா கார்னர் ரவுண்டானா, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மாட்டுவண்டியில் செந்தில்பாலாஜி நூதன முறையில் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.