ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் பறிமுதல்: காவலர்களுக்கு பாராட்டு - ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டில் 145 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் தனிப்படையினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி தெரிவித்துள்ளனர்.