உதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி! - உதகை மலர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று (செப்.11) தொடக்கிவைத்தார். இந்தப் பூங்காவில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்களும், ஏழாயிரத்திற்கும் அதிகமான மலர் தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டெய்லியா, சால்வியா, பிக்கோனியா, மேரிகோல்ட் உள்பட 140 வகையான பூக்கள் இடம்பெற்றுள்ளது.