மண் வளத்தைக் காக்க 1500 பனை விதைகள் நட்ட பள்ளி மாணவர்கள்! - நாகை பள்ளி மாணவர்க்ள நட்ட பனை விதைகள்
நாகப்பட்டினம் : குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மண்ணின் வளத்தைக் காக்கும் நோக்கத்தோடு 25 என்.எஸ்.எஸ். மாணவர்கள் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழியேற்று பின்னர், ஆற்றுப்படுகைகள், குளக்கரை ஓரங்களில் 1500 பனை விதைகளை நட்டு வைத்தனர்.
Last Updated : Sep 30, 2019, 9:01 AM IST