ஒரே நிமிடத்தில் யோகா கலையில் 18 முறை சூரிய நமஸ்காரம் செய்த பள்ளி மாணவர்கள்.. - திருநின்றவூர் பள்ளி மாணவர்கள் யோகாசனத்தில் சாதனை
திருநின்றவூர் அருகே தனியார் யோகாசனம் பயிற்சி மையத்தின் சார்பில் யோகாசன சாதனை விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உடலை வில்லாக வளைத்து யோகாசனம் செய்து காட்டி அசத்தினார். குறிப்பாக 6 பள்ளி மாணவர்கள் 6 பேர் ஒரு நிமிடத்தில் 18 முறை யோகாசனத்தில் சூரிய வணக்கம் செய்துக்காட்டி சாதனை படைத்தனர். இந்த நிகழ்வு யுனிகோ கோ வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவாகியுள்ளது.