மீண்டும் பள்ளிக்கு போகலாம்!- திருச்சியில் உற்சாகத்துடன் பள்ளி சென்ற மாணவர்கள் - மீண்டும் பள்ளிக்கு போகலாம்
திருச்சி:தமிழ்நாட்டில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். கரோனா பரவலால் அரையாண்டு விடுமுறை நீடித்த நிலையில் இன்று (பிப்ரவர் 1) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. திருச்சியில் உள்ள 540 பள்ளிகளிலும் 100 விழுக்காடு மாணவர்கள் வருகை புரிந்தனர். கரோனோ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.