அதகளமான ஆவடி.. மாணவிகள் குடுமிப்பிடி! - சென்னை மாவட்ட செய்திகள்
ஆவடி பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி பேருந்து பணிமனையில் சில பெண்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பொதுமக்கள் எவ்வளவு முயன்றும் இவர்கள் சண்டையிடுவதை நிறுத்த முடியவில்லை. தற்போது இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.