VideoLeak:பட்டியலின மாணவனை அதிக கட்டணம் செலுத்தக் கூறி பேரம் பேசிய தாளாளர் - நாகப்பட்டினம் செயின்ட் அந்தோணி பள்ளி
நாகையில் செயல்பட்டு வரும் செயின்ட் அந்தோணி பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு பயின்றுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளியின் தாளாளர் டேவிட் செல்வகுமார் பேரம் பேசிய சம்பவம் கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்தான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.