கோயம்புத்தூரில் சிறுத்தை நடமாட்டம், அச்சமூட்டும் காணொலி - Coimbatore
கோயம்புத்தூர்: மாங்கரை - ஆனைக்கட்டி சாலையில் நேற்று (மார்ச் 16) இரவு சிறுத்தை ஒன்று மலைப்பாதையில் செல்வதை அவ்வழியே சென்ற இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையிடமும் காவல் அலுவலர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அவ்வழியாக யானை நடமாட்டம், காட்டுப்பன்றிகள் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் வெளியில் செல்லுமாறும் வனத்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.