தேர்தல் நடைமுறை விதிகள் அமல்: அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் அழிப்பு - எச்சரிக்கை, நடவடிக்கை, ஆட்சியர் கதிரவன்
ஈரோடு: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நேற்று (பிப்.26) முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலை ஓரங்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சுண்ணாம்பு பயன்படுத்தி சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். உரிய அனுமதியின்றி அரசு கட்டிடங்கள், சாலையோர பாலங்கள், தடுப்புச் சுவர் போன்றவற்றில் சுவர் விளம்பரங்கள் எழுதுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.