அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன் - சசிகலா - சசிகலா சென்னை வருகை
திருப்பத்தூரில் அமமுக தொண்டர்களிடம் காரில் இருந்தவாரே பேசிய சசிகலா, "என் வாழ்நாள் முழுவதும் கழகமே குடும்பம்; குடும்பமே கழகம் என எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்றத்திற்காக உழைப்பேன். ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றும் என் பிள்ளைகள் தான். கழகம் எத்தனை முறையோ சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவையாக கழகம் மீண்டெழுந்துள்ளது. எம்ஜிஆர் வழிவந்த பிள்ளைகள் ஒற்றுமையாக ஒன்றாய் செயல்பட வேண்டும். ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன், அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்" என்றார்.
Last Updated : Feb 8, 2021, 9:17 PM IST