நெல்லையில் சமத்துவ பொங்கல்! - Samathuva Pongal celebrated in Tirunelveli
பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லுாரியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தச் சமத்துவ பொங்கல் விழாவில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் கண்டுகளித்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்தச் சமத்துவ பொங்கல் நடைபெற்றதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.