ஆடிப் பண்டிகையையொட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் - ஆடி பண்டிகை
சேலம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி பண்டிகை பூச்சாட்டுதலுடன் தொடங்கி தினம்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றுவருகிறது. பண்டிகையின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.