தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ருத்ராட்சக் காய்கள்! - சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ருத்ராட்சக் காய்கள்

By

Published : Oct 24, 2020, 2:48 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இமயமலை, நேபாளம் போன்ற மலைப்பிரதேசங்களில் காணப்படும் ருத்ராட்ச மரங்கள் உள்ளன. தற்போது, இவற்றின் சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, அதிக அளவில் காய்கள் காய்த்துள்ளன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர். கீழே விழும் காய்களை தோட்டக்கலையினர் சேகரித்து வருகின்றனர். சேகரித்து சிலர் விற்பனை செய்தும் வருகின்றனர். கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக ருத்ராட்சக் காய்கள் காய்த்துள்ளன. ஐந்துமுகம் கொண்ட இந்த ருத்திராட்சம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ABOUT THE AUTHOR

...view details