மயிலாடுதுறை மீனவ கிராமங்களில் கடல் சீற்றம்! - மயிலாடுதுறை மாவட்டம்
நாகை: கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் புரெவி புயல் எதிரொலியால், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், செம்பனார்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்டப் கடற்கரை பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்வதோடு, கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.