கனமழையால் அழுகும் 'ஆர்னமென்டல் செர்ரி' மலர்கள் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! - Kodaikanal Bryant Park
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தில் பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் பூக்கத் தொடங்கும் இம்மலர்கள் பிப்ரவரி, மார்ச் மாதாங்கள் வரை நீடிக்கும். பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இளம்சிவப்பு நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் செர்ரி மலர்களை கண்டு ரசித்து விட்டு புகைப்படம் எடுத்து மகிழ்வர். ஆனால் கொடைக்கானலில் பெய்த கனமழையால் பூத்து குழுங்கிய மலர்கள் அனைத்தும் தற்போது அழுகி வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Last Updated : Jan 20, 2021, 11:06 PM IST