குன்னூரில் மேகமூட்டம் - பொதுமக்கள் அவதி - நீலகிரி மாவட்ட செய்திகள்
நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்மழை அதிகரித்துள்ளது. இதனால், குன்னூர் மலைப்பாதையில் அதிகாலை முதல் கடும் மேகமூட்டம் நிலவி, மலைப்பாதையில் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகள் எரிய விட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன. சில இடங்களில் கடும் மேகமூட்டத்தால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.