குமரியில் கனமழை - சாலைகள் துண்டிப்பு - கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக பெய்த கனமழை காரணமாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதோடு அரிசி, மளிகை, காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் கிராம மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.