காட்டெருமை கூட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய வகை வன விலங்குகளும் வாழ்ந்துவருகின்றன. சமீப காலமாக காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பகல் நேரங்களிலேயே சாலைகளின் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அச்சம் அடைந்துவருகின்றனர். கடந்த மாதத்தில் காட்டெருமைகள் தாக்கப்பட்டு இப்பகுதியில் ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், வெலிங்டன் ராணுவ மையப் பகுதியில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.