கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு பேரணி! - திருவாரூர் கல்லூரி மாணவ, மாணவிகள்
திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (பிப்.9) திருவாரூரில் நடைபெற்றது. இதில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் முக்கிய சாலை வழியாக சாலை பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.