வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிக்குத் திரும்பும் ரிவால்டோ யானை - undefined
முதுமலை வனப் பகுதியில் விடப்பட்ட காட்டு யானை ரிவால்டோ 24 மணி நேரத்தில் மீண்டும் வனப்பகுதி வழியாக மசினகுடி அருகே திரும்பிவந்ததால் வனத் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 90 நாள்களாக மரக்கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ரிவால்டோ யானை வல்லுநர் குழுவின் பரிந்துரைப்படி நேற்று மதியம் அடந்த வனப்பகுதியில் விடபட்டது. கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் 35 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளது. யானையைத் தடுத்து நிறுத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.