தடுப்பூசி போடும் இடத்தில் காணாமல்போன தகுந்த இடைவெளி! - social gap
மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூ4) திருவிழந்தூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிலிருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை முதல், இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. 500 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்த அந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்காமல் முகாமிற்குள் குவிந்ததால் அங்கு இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் எழுந்து செல்ல தொடங்கினர். பின்பு அங்கு வந்த நகராட்சி ஆணையர், காவல்துறையினர் மருத்துவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.