கொள்ளிடம் ஆற்றில் சிக்கி தவித்த 60 மாடுகள் மீட்பு - ஆற்றில் சிக்கிய மாடுகள் மீட்பு
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கோடாலிக்கருப்பூர் கொள்ளிடம் ஆற்றில் 60 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், 60 மாடுகளும் சிக்கிக்கொண்டன. 1 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் மாடுகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், மாடுகளை பத்திரமாக மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.