முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை - தமிழ்நாடு
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற வேண்டுகிறோம். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக ஆணையை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.