உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்த வெளிநாட்டினர்! - KODAIKANAL RUSSIA TOURIST DANCE
உலக சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இச்சூழலில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கொடைக்கானலுக்கு வருகைதந்தனர். கொடைக்கானலில் அமைந்துள்ள முக்கிய பழங்கால கோயில்களுக்கு சென்று வழிப்பட்ட பின், ஏரிச்சாலை பகுதியில் ராமர் குறித்த பாடல்களை பாடியும் ஆர்மோனியம், மத்தளம் போன்ற இசை கருவிகளைக் கொண்டு இசை அமைத்தும் நடனம் ஆடினர். அங்கிருந்த சுற்றுலா பயணிகளில் சிலர், இவர்களின் பாடல்களை கேட்டு அதற்கேற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.