Rajinikanth birthday: ரஜினிகாந்த் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை - rajinikanth birthday celebration at mayiladuthurai
நடிகர் ரஜினிகாந்தின் 72ஆவது பிறந்தநாள், அவரது ரசிகர்களால் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர்கள் காலை முதல் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகின்றனர். காலை 7 மணிக்கு ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவுகளை வழங்கினர். தொடர்ந்து, மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய ரஜினி ரசிகர்கள், பின்னர் கோயில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு, ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.